தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், "கூலி" என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, சோபனா உள்ளிட்டோர் நடித்து வெளியான மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் "தளபதி"திரைப்படம். இன்று வரை கிளாசிக் பட வரிசையில் இடம் பெற்றுள்ள இப்படம், நடிகர் ரஜினியின்  பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

படம் வெளியாகி 33 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும், இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வரையிலும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும், இன்றைய தலைமுறையினரும் கொண்டாடும் வகையில் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி தளபதி படம் ரீரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடதக்கது.