தூத்துக்குடியில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், இன்று (7.12.2024) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.

இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.