தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரும், அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளருமான தனராஜ் என்பவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :

தூத்துக்குடி பி & டி காலனியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ஜோதி மகன் தனராஜ் (40). இவர் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆவார். மேலும் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும் உள்ளார். இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு தனது உறவினரான ஆல்வின் ஜோயல் மற்றும் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த பேச்சிமுத்து மகன் சித்திரை பிச்சமுத்து (28) என்பவர் ரோட்டில் உடைத்து கிடந்த தடியங்காயால் வழக்கி விழுந்தாராம். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி விட வரும்போது ரோட்டில் தடியங்காய் உடைத்து என்னை கீழே விழ வைத்தது நீங்கள் தானே என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் ஆல்வின் ஜோயல் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினாராம்.

இதனால் தனராஜ், சித்திரை பிச்சமுத்துவை தாக்கினாராம். இதையடுத்து சித்திரை பிச்சமுத்து தான் வைத்திருந்த ஆயுதத்தால் தனராஜை  தாக்கியுள்ளார். இதில் தனராஜ்க்கு வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் வழக்குப் பதிந்து, சித்திரை பிச்சமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.