தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை - தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
நிருபர்
November 29, 2024
தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை - தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் கார்த்திக் (எ) காத்திக்குமார்(32) என்பவரை கைது செய்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் இன்று (29.11.2024) குற்றவாளியான கார்த்திக் (எ) காத்திக்குமார் என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர்களான நாககுமாரி மற்றும் முத்துலெட்சுமி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கணேசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.