<p><b>தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது, பைக் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</b><br></p><p>தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் செல்லப்பாண்டி (64). இவர் தூத்துக்குடி - எட்டையாபுரம் சாலையில் டி மார்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இது குறித்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த வடக்கு சங்கரப்பேரியை சேர்ந்த நீதிராஜன் மகன் கருப்பசாமி (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.</p>