<p><b>சாத்தான்குளம் அருகே வியாபாரி வீட்டில் பருத்தி மூடைகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.</b></p><p>சாத்தான்குளம், கல்விநகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராகுல்(32). இவர் வியாபாரிகளிடம் பருத்தி மற்றும் நெல் கொள்முதல் செய்து வியாபாரம் செய்துவருகிறார்.இதையொட்டி வீட்டின் அருகில் பருத்தி மூடைகளை அடுக்கிவைத்திருந்தார். இந்நிலையில் வீட்டின் அருகில் வைத்திருந்த தலா 45 கிலோ எடைகொண்ட 4 பருத்தி மூடைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதன்மதிப்பு ரூ.12 ஆயிரம் ஆகும். இதுகுறித்து ராகுல் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>அதில், சாத்தான்குளம் அமுதுண்ணாகுடியை சேர்ந்த நீலகுமார் மகன் அரவிந்தன்(20) மற்றும் முதலூரை சேர்ந்த சரவணன் ஆகிய இருவரும் சம்பவத்தன்று பருத்தி மூடைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து&nbsp; போலீசார் அரவிந்தனை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளியான சரவணனை தேடிவருகின்றனர்</p>