தூத்துக்குடியில் கடல் அட்டைகளை கடத்தியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு!
நிருபர்
August 10, 2024
தூத்துக்குடியில் கடல் அட்டைகளை கடத்தியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு! One year imprisonment for the smuggler of sea cards in Tuticorin: Court verdict!
<p><b>தூத்துக்குடியில் கடல் அட்டைகளை கடத்திய வழக்கில் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதி தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</b><br></p><p>தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( 46 ). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தி வந்தார். அவர் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி ஜே.எம். எண் 2 கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி கனிமொழி விசாரித்தார். வழக்கில் குற்றம் தட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்</p>