<p><b>தட்டார்மடம் அருகே உள்ள&nbsp; &nbsp; சுப்பிரமணியபுரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் குமார் மகன் சுப்பிரமணியன்&nbsp; ( 28 ) இவர் முதலுரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டு காரரான&nbsp; ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த வியாபாரி லிங்க குமார்&nbsp; ( 25 ) இருவருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.</b><br></p><p>இந்நிலையில் சுப்பிரமணியபுரம் விலக்கில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே&nbsp; சுப்பிரமணியன் நின்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த லிங்க குமார் முன் விரோதம் காரணமாக காரை கொண்டு சுப்பிரமணியன் மீது பயங்கரமாக மோதினாராம். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன்&nbsp; தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்&nbsp; அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுப்பிரமணியன் தட்டார் மடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தட்டார் மடம்&nbsp; இன்ஸ்பெக்டர் அனிதா வழக்கு பதிவு செய்து&nbsp; தலைமறைவான லிங்க குமாரை தேடி வருகின்றனர்.</p>