குறுக்குச்சாலையில் கடைகளில் சுகாதாரத்துறையினர் ரெய்டு : காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம்!
நிருபர்
August 02, 2024
காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம்!

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குசாலை பகுதியில் உள்ள டீக்கடை, பலசரக்கு ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளில் இன்று சுகாதார ஆய்வாளர்கள் தேவசுந்தரம், காளிமுத்து, அருணாச்சலம் மானக் ஷா, கங்காதர் பாபு ஆகியோர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் ரெய்டு நடத்தினர்.

அப்போது காலாவதியான உணவு பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது, தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் வைத்திருந்தது, பொது இடங்களில் புகைபிடித்தல் உட்பட 9 கடைகளின் உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர். மேலும், காலாவதியான பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.