<p><b>சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் மாடு மேய்ந்த தகராறில் பால் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தோட்ட உரிமையாளர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.</b><br></p><p>சாத்தான்குளம் அருகே தெற்கு பன்னம்பாறை வடக்கு தெருயை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் நல்லகண்ணு(37). இவர் ஆடு, மாடு வளர்த்து வருவதுடன்&nbsp; பால் வியாபாரமும் செய்து வருகிறார். இவருக்கும், பன்னம்பாறை&nbsp; வடவிளை ரோடு&nbsp; தெருவைச் சேர்ந்த தோட்ட உரிமையாளர் வருணபாண்டியன் மகன் கொம்பையா என்பவருக்கும் தோட்டம் அருகில் மாடு மேய்ந்த தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 26ம்தேதி நல்லகண்ணு, அந்த பகுதியில் மாடு மேய்க்க சென்றபோது கொம்பையா உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து நல்லகண்ணுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினராம் . இதில் அவருக்கு தலை மற்றும்&nbsp; காலில்&nbsp; பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சாத்தான்குளம் அரசு&nbsp; மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.&nbsp;</p><p>இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம்&nbsp; காவல் ஆய்வாளர்&nbsp; ஏசு ராஜசேகரன்&nbsp; செவ்வாய்க்கிழமை&nbsp; வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட கொம்பையா மற்றும் அதே பகுதியை சேர்ந்த நல்லையா, ராஜா, சுந்தரம் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.</p>