<p><b>கோவில்பட்டி&nbsp; பிரசித்தி பெற்ற ஸ்ரீ செண்பகவல்லி ஸ்ரீ பூவனநாத சுவாமி&nbsp; ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில்&nbsp; அம்மன் செண்பகவல்லி பிரதிஷ்டை&nbsp; நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தை&nbsp; முன்னிட்டு பால்குடத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.</b><br></p><p>இதனை முன்னிட்டு கோவில் முன்பு அமைந்துள்ள மண்டபத்தில்&nbsp; இருந்து&nbsp; ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேல் தாளம்&nbsp; முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.</p>