<p><b>சாத்தான்குளம்&nbsp; அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற&nbsp; இளைஞர்&nbsp; மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி&nbsp; &nbsp; உயிரிழந்தார்.&nbsp;</b><br></p><p>ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாக்கியம் மகன் சுரேஷ் (22). இவர் ஐடிஐ&nbsp; முடித்து&nbsp; சாத்தான்குளம்&nbsp; அருகே உள்ள பழனியப்பபுரத்தில் உள்ள சோலார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அவரது அம்மாவிடம் இரவில் வேலை இருப்பதால் மறுநாள் வீட்டுக்கு வருவதாக தெரிவித்து சென்றாராம். மறுநாள் அவரது அண்ணி மீனாவுக்கு&nbsp; &nbsp;கைப்பேசியில் பேய்க்குளம் அருகே உள்ள பெட்ரோல் பல்க் பின்புறம் உள்ள இடத்தில் பூச்சி கொல்லி&nbsp; விஷம் குடித்து கிடப்பதாக சுரேஷ்&nbsp; தெரிவித்துள்ளார்.&nbsp; உடனே மீனாவும், சுரேஷின் தாயார் செல்வி (53) ஆகியோர் ஆட்டோவில் வந்து அவரை மீட்டு ஸ்ரீவைகுணடம்&nbsp; அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி&nbsp; &nbsp;வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.&nbsp;&nbsp;</p><p>இதுகுறித்து&nbsp; அவரது தாயார் செல்வி&nbsp; சாத்தான்குளம்&nbsp; காவல் நிலையத்தி்ல&nbsp; அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர்&nbsp; (பொறுப்பு) ஜீன்குமார் வழக்குபதிந்து, அவர் எதற்காக விஷம் குடித்தார் உள்ளிட்டது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.</p>