<p><b>சாத்தான்குளம் அருகே வழிமறித்து செல்போன், பணம் பறித்த வாலிபரை&nbsp; போலீசார் கைது செய்தனர்.&nbsp;</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தேரிப்பனை டி.கே.சி. நகரைச் சேர்ந்தவர் செல்லச்சாமி மகன் முருகன் (51). விவசாயியான இவர் பைக்கில் பண்ணம்பாறை&nbsp; வள்ளியம்மாள் புரத்தில் உள்ள&nbsp; உறவினரை பார்த்துவிட்டு&nbsp; திரும்பி செல்லும் போது, பைக்கில் வந்த 4பேர் அவரை வழிமறித்து பண்ண பாறைக்கு வழி கேட்டு உள்ளனர். அப்போது அவர் எதிர்பாராத நேரத்தில்&nbsp; அவரது செல்போன் மற்றும் ரூ.500 பணத்தை பறித்து சென்று விட்டனர்.&nbsp;</p><p>இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன் பேரில்&nbsp; சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்கு பதிவு செய்தார். உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார்&nbsp; இன்ஸ்பெக்டர் ஜீன் குமார் ஆகியோர் விசாரணை நடத்தி பணம், செல்போன் பறித்த ஸ்ரீவைகுண்டம் சுபாஷ் நகரை சேர்ந்த மாடசாமி மகன் மகேஷ் சூர்யா (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.</p>