திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை
நிருபர்
February 05, 2021
திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் மாசித் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தமிழக இந்து சமய அறநிலை துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மாசி திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில், சுவாமி வீதி உலாவும் தேரோட்டமும் மிகவும் முக்கியமானது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் காரணமாக கோவிலில் வழக்கமாக நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் பக்தர்கள் அனுமதி இன்றி பிரகாரத்தின் உள்ளேயே நடைபெற்றது. சுசீந்திரம் உள்ளிட்ட கோவில்களில் திருவிழாக்கள் பக்தர்கள் அனுமதியுடன் நடைபெறுகிறது.

அதேபோல், திருச்செந்தூரில் வருகிற 17-ஆம் தேதி தொடங்க உள்ள மாசித் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வழக்கம்போல சுவாமி வீதி உலா நடைபெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திருச்செந்தூர் ரதவீதிகளில் கடந்த 10 மாதமாக முடிவடையாமல் உள்ள சாலை பணிகளை திருவிழாவிற்கு முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது