தூத்துக்குடி அருகே சட்ட விரோதமாக புகையிலை, மது விற்பனை செய்த உணவகத்திற்கு சீல்!
நிருபர்
June 26, 2024
தூத்துக்குடி அருகே சட்ட விரோதமாக புகையிலை, மது விற்பனை செய்த உணவகத்திற்கு சீல்!
<p><b>தூத்துக்குடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை, சட்ட விரோதமாக மது விற்பனை செய்த உணவகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.</b></p><p>தூத்துக்குடி அருகே குறுக்குச்சாலை பகுதியில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு தலைமையிலான அலுவர்கள், போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். </p><p>அப்போது, அங்குள்ள ஓரு உணவகத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், சட்ட விரோதமாக மது விற்பனை ஆகியவை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர்.</p>