தூத்துக்குடியில் 72வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
நிருபர்
January 26, 2021
தூத்துக்குடியில் 72வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற 72வது குடியரசு தின கொண்டாட்ட விழாவில் ஆட்சியர் செந்தில் ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட விளையட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 72வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு துறை, தேசிய மாணவர் படை, ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 79பேருக்கு பதக்கங்கள் மற்றும் 54 பேர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.இவ்விழாவில் அனைத்து துறைகளின் சிறப்பாக பணிபுரிந்த 353 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 106 பயனாளிகளுக்கு பேருக்கு ரூ.1,69,34,553 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்னு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங் கலோன், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், டவுண் டிஎஸ்பி கணேஷ், தூத்துக்குடி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன், காவல்துறை செய்தி தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். கரோனா பாதுகாப்பு விதிகள் காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக நடைபெறும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை