மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு பசுவந்தனையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்தவர் ஜெயலலிதா. கடந்த 1948 ஆம் ஆண்டு பிறந்த இவர், திரையுலகில் முன்னணி நடிகையாகவும், அதன் பின்னர் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சகாப்தமாகவும் திகழ்ந்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அவரது 76 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு ஆலோசனையின்படி,

ஒட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றிய  செயலாளரும், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான காந்தி காமாட்சி தலைமையில் அதிமுக சார்பில் பசுவந்தனையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி பிரதிநிதி பால்ராஜ், பசுவந்தனை நகர செயலாளர் சுப்பையா, முருகன், மாரியப்பன், அண்ணாதுரை, தென்கரை, அருணாச்சலம், நாகம்பட்டி கிளைச் செயலாளர் கருப்பசாமி, கீழமுடிமன்  கதிர்வேல், கீழமங்கலம் முத்தழகு, மாரியப்பன், விட்டிலாபுரம் கிளை செயலாளர் மாரியப்பன். கே.துரைசாமிபுரம் கிளை செயலாளர் நம்பிராஜ், பசுவந்தனை அய்யம்பிள்ளை, நாகம்பட்டி ஆட்டோ ரவி, மேலமங்கலம் செல்வராஜ், ஒட்டப்பிடாரம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயராம் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.