நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற்றது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டமா? மாநாடா? என்று வியக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக தேர்தல் பரப்பரை ஆரம்பித்துள்ளனர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுகவினர்.

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பிலான நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று தூத்துக்குடி - மீளவிட்டான் சாலையில் உள்ள என்.பெரியசாமி திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான  பொன்.முத்துராமலிங்கம்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான  கீதா ஜீவன்  தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான  அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்  என்.ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர்  ஆனந்தசேகரன், மாநில சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர்  சபி, மாநில மீனவரணி துணை அமைப்பாளர்  புளாரன்ஸ், துணை மேயர்  ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் என ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த நாடாளுமன்ற முதல் தேர்தல் பரப்புரை கூட்டமானது பொதுக்கூட்டமா? அல்லது மாநாடா என்று வியக்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் இருந்தது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மீண்டும் கனிமொழி போட்டியிடுவாரா? இல்லையா? என்ற சந்தேகங்கள் ஒரு புறம் இருந்தாலும், தூத்துக்குடி எம்பி தொகுதியை மீண்டும் திமுகவே கைப்பற்றும் என்பதில் மாற்றுகருத்து இல்லை என்று கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.