தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக மதுபாலன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பணி இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த மதுபாலன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று பொறுப்பேற்றுக் காெண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:-

"தூத்துக்குடி மாநகராட்சியில் சுகாதாரம், சாலைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றார்.

புதிய ஆணையருக்கு மாநகர கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், துணைப் பொறியாளர் சரவணன் செயற் பொறியாளர் ரங்கநாதன், துணை ஆணையர் ராஜாராம், உதவி ஆணையர்கள் ராமசந்திரன், தனசிங், சேகர், சொர்ணலதா, சுகாதார அலுவலர் சுமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.