வேளாங்கண்ணிக்கு சென்ற போது சோகம் - தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு... நடந்தது என்ன?
நிருபர்
January 20, 2024
வேளாங்கண்ணிக்கு சென்ற போது சோகம் - தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு... நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேதுபாவாசத்திரம் அருகே இன்று அதிகாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதனால் காரில் பயணித்தவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது காரில் பயணித்த 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. மேலும் 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடுவது தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து அறிந்த பட்டுக்கோட்டை காவல் துறையினரும், அக்கம் பக்கத்து கிராமத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து வேனில் இருந்தவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதன்பிறகு காரில் இருந்து மீட்க்கப்பட்ட 7 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த 4 பேரின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கோர விபத்தில் சிக்கியவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வேளாங்கண்ணிக்கு காரில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது தெரியவந்தது.

விபத்துக்குள்ளான காரில் 11 பேர் பயணம் செய்த நிலையில், பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்ன பாண்டி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் பட்டுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கி இறந்த சோகம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில்:-

நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.