பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
நிருபர்
December 11, 2023
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தாெகை திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின ஆகிய பிரிவுகளைச் சார்ந்து நடப்பாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தாெகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) 31.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தகுதிகள்: மாணவ/மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். 2023 -24 ஆம் ஆண்டில் https://Scholarships.gov.in/public/FAQ/topclass _school_list 2211 compressed.pdf என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மட்டுமே இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுப்பித்தல்: கடந்த நிதியாண்டில் புதியது கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து 2023-24ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை 31.12.2023க்குள் புதுப்பிக்க வேண்டும்.

புதியது : நடப்பாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்று புதிதாக விண்ணப்பிக்க விரும்பும்; மாணவ/மாணவியர்கள் முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று, பட்;டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் New Registration என்ற இணைப்பில் சென்று தங்களது விவரங்களை உரிய ஆவணங்களுடன் 31.12.2023க்குள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள்: தகுதியான மாணவ/மாணவியர்கள் இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் சரியாக உள்ளனவா என 15.01.2024 க்குள் சரிபார்த்தல் வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National Scholarship Portal (https//scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https//socialjustice.gov.in) பயன்படுத்தி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.