ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் : பஞ்., தலைவர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது!
நிருபர்
November 01, 2023
ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் : பஞ்., தலைவர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது!

ஊராட்சிகள் தினத்தையொட்டி, ஓட்டப்பிடாரம் கிராம ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவ.1ம் தேதியான இன்று, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா தலைமையில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணைய வழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல் மற்றம் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.