<p><b>தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே எதிரெதிரே சென்ற இரண்டு இருசக்கர&nbsp; வாகனங்கள் மோதிய விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் பலியானார்.</b><br></p><p>கூட்டாம்புளியை சேர்ந்தவர் பொன்சீலன் ( 44 ) அவரது மனைவி ஜெயகீதா ( 39 ) மகன் ஷெல்டர் ( 7 ). இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு சாயர்புரம் செல்ல தேரி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த நித்திஷ்&nbsp; ( 22 ) மற்றொரு இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளார்.&nbsp; இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் நித்திஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த பொன்சிலன், ஜெயகீதா, ஷெல்டன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>