திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
நிருபர்
October 14, 2023
திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
<p><b>திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.</b><br></p><p>இந்த நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமை தாங்கினார். மாணவ பயிற்சினர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் விளக்கி கூறினார். சிறப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் வீரர்கள் பாலகிருஷ்ணன், ரமேஷ், இசக்கி, அகஸ்டின் ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அருள் செய்திருந்தார்.</p>