தூத்துக்குடியில் நடிகர் விஷால் ஷூட்டிங்
நிருபர்
September 28, 2023
விஷால் நடிப்பில் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை இயக்குனர் ஹரி இயக்கிய நிலையில், இருவரும் மூன்றாவது முறையாக மற்றொரு படத்தில் இணைகின்றனர்.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை.

அந்த வரிசையில், விஷால் நடிப்பில் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை இயக்குனர் ஹரி இயக்கிய நிலையில், இருவரும் மூன்றாவது முறையாக மற்றொரு படத்தில் இணைகின்றனர்.

இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34-வது படமான இது வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஹரி.

இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக தூத்துக்குடியில் தொடங்கி நடந்தது. இதற்கிடையில் மார்க் ஆண்டனி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விஷால் வந்த நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப் பட்டது. இப்போது மார்க் ஆண்டனி படம் ரிலீஸாகி ஹிட்டாகியுள்ள நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் ஹரி படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மில்லர் புரம் பிஎம்சி பள்ளி அருகில் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹைபர் மார்கெட், ஜவுளி கடைகளை செட் அமைத்து ஷூட்டிங் எடுத்து வருகின்றனர்.