தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
நிருபர்
September 24, 2023
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ஆதிபராசக்திநகரை சேர்ந்த சிதம்பரம் மகன் வசீகரன் (42) என்பவர் கடந்த 21.09.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். பின்னர் அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து வசீகரன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சுரேஷ்குமார் (40) என்பவர் மேற்படி வசீகரனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.