<p><b>ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் காயமடைந்த மின்வாரிய ஊழியர் இறந்தார்.&nbsp;</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கொடியங்குளம் மேலத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 51). இவர் கடம்பூர் துணை மின்நிலையத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை 22-ந் தேதி ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டுடன்பட்டி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது.</p><p> இதையடுத்து அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இச்சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல் ஆய்வாளர் தர்மர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>