சீமானுக்கு வீரலட்சுமி வக்கீல் நோட்டீஸ்
நிருபர்
September 22, 2023
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
<p><b>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். </b></p><p>அப்போது தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக செயல்பட்டார். இதையடுத்து சீமானை வீரலட்சுமி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றார்.</p><p>இதைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் காலில் சீமான் விழுந்து சமரசம் செய்து கொண்டதாகவும் தன்னிடம் உள்ள படையை திரட்டி வந்தால் நாம் தமிழர் கட்சியால் வட தமிழகத்தில் கால் வைக்க முடியாது என்றும் வீரலட்சுமி சீமானுக்கு சவால் விடுத்தார். தன் மீது அவதூறாக பேசிய வீரலட்சுமி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற சீமான் பேச்சுக்கு, சீமான் தான் தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீரலட்சுமி கூறினார்.</p><p>இந்நிலையில் அவதூறு பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என கி.வீரலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.</p>