<p><b>தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 50). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இவர் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது.&nbsp;</b></p><p>இதனையடுத்து அவர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது</p><p>இந்த வழக்கில் மாணவிகள் பாலியல் தொந்தரவு எதுவும் ஏற்படவில்லை என்று சாட்சி அளித்ததால், ஆசிரியர் பொன்ராஜை விடுதலை செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டு உள்ளார்.</p>