இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தியவர் கைது!
நிருபர்
July 31, 2023
இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தியவர் கைது!
<p><b>முறப்பநாடு அருகே சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் நேற்று (30.07.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் வழ வல்லநாடு ரோடு பகுதியில் முறப்பநாடு அகரம் பகுதியை சேர்ந்த பத்திரகாளி மகன் அழகுசுந்தர் (21) என்பவர் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் திருடியது தெரியவந்தது.</p><p>உடனே மேற்படி போலீசார் அழகுசுந்தரை கைது செய்து, அவரிடமிருந்த 6 மூடை ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தியவர் கைது! இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>