இபிஎஸ் படத்தை எரித்த பாஜக நிர்வாகி இரவில் நீக்கம்... காலை மீண்டும் சேர்ப்பு!
நிருபர்
March 16, 2023
இபிஎஸ் படத்தை எரித்த பாஜக நிர்வாகி இரவில் நீக்கம்; காலை மீண்டும் சேர்ப்பு!
<p><b>அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி நேற்றிரவு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.</b></p><p>கட்சியின் நிலைபாட்டை மீறி செயல்பட்டததற்காக மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு தினேஷ் ரோடி வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து 6 மாத காலம் விலக்கி வைப்பதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் நேற்றிரவு அறிவித்தார்.</p><p>இந்நிலையில், மாவட்ட தலைவரின் அறிவிப்பை ரத்து செய்து மாவட்ட இளைஞரனி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்வார் என்று தமிழக பாஜக தலைவரின் ஒப்புதலோடு மாநில பொதுச் செயலாளர் பொன்.வி.பாலகணபதி அறிவித்துள்ளார்.</p><p>இரவில் மாவட்ட தலைவரால் நீக்கப்பட்ட நிர்வாகி, காலையில் மாநிலப் பொதுச் செயலாளரால் சேர்க்கப்பட்ட சம்பவம் மாவட்ட பாஜகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>