தூத்துக்குடி அருகே கோவில் பூட்டை உடைத்து திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
நிருபர்
February 08, 2023
தூத்துக்குடி அருகே கோவில் பூட்டை உடைத்து திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
<p><b>தூத்துக்குடி அருகே கோவிலின் பூட்டை உடைத்து அங்குள்ள நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.</b></p><p>தூத்துக்குடி அருகே கீழத்தட்டப்பாறை கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் பொட்டுத் தாலி, உண்டியல் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா சங்கர் தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.</p><p> அவரது புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சத்தியபாமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>