சுதந்திரபோராட்ட வீரர் சுந்தரலிங்கத்திற்கு முழு உருவ வெண்கல சிலை - சட்டமன்றத்தில் சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை!
நிருபர்
January 11, 2023
சுதந்திரபோராட்ட வீரர் சுந்தரலிங்கத்திற்கு முழு உருவ வெண்கல சிலை - சட்டமன்றத்தில் சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை!
<p><b>ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க சட்டமன்றத்தில் சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை வைத்தார்.</b></p><p>ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் சுதந்திரபோராட்ட மாவீரர் வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச்சிலையும் நூலகமும் அமைத்திட சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கைக்கு பதில் அளித்த செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன்,</p><p>"சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா குறிப்பிட்டிருக்கிற அந்த நினைவிடத்தை விரைவில் நேரடியாக நாங்கள் பார்வையிடுவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அந்த நினைவிடத்தைப் நேரடியாகப் பார்வையிட்டு, அதற்கேற்ப நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்தார்.<br></p>