தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி!
நிருபர்
November 04, 2022
தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி!
<p><b>தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்</b>.</p><p>கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம் கன்னியாகுமரி அருமனை ஆகிய ஆறு இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை. இந்த 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்எஸ்எஸ் காத்திருக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தல்.</p><p>6 இடங்களைத் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட 23 இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p>