பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
நிருபர்
November 03, 2022
ஓட்டப்பிடாரம் அருகே முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
<p><b>ஓட்டப்பிடாரம் அருகே முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். </b></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி வல்சா (45) என்பவரை கடந்த 24.10.2022 அன்று முன்விரோதம் காரணமாக ஓட்டப்பிடாரம் இந்திராநகரைச் சேர்ந்த மாடசாமி மகன் லட்சுமணன் (34) என்பவர் வல்சா வீட்டிற்கு சென்று அவரிடம் தவறாக பேசி தகராறு செய்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து வல்சா அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சோலையப்பன் வழக்கு பதிந்து, லட்சுமணனை கைது செய்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>