எட்டையபுரத்தில் தேவர் ஜெயந்தி விழா - அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!
நிருபர்
October 31, 2022
எட்டையபுரத்தில் தேவர் ஜெயந்தி விழா - அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!
<p><b>எட்டையபுரத்தில் நகர அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.</b></p><p>பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில், முத்துராமலிங்கத் தேவரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>இந்நிகழ்வில், அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் சிவசங்கர பாண்டியன், செல்வி, சாந்தி, கருப்பசாமி, சொக்கன், சீனா என்ற முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி மற்றும் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>