தூத்துக்குடியில் கனல் கண்ணன் கைதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
நிருபர்
August 16, 2022
தூத்துக்குடியில் கனல் கண்ணன் கைதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!
<p><b>இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநில செயலர் கனல் கண்ணன் கைதை கண்டித்து, தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</b></p><p>இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநில செயலர் கனல் கண்ணன் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.</p><p>அதனைத்தொடர்ந்து, கனல் கண்ணன் கைதை கண்டித்து, தூத்துக்குடி இந்து முன்னணியின் சார்பாக தாளமுத்து நகர் மெயின் ரோட்டில், ஒன்றிய தலைவர் சிபு தலைமையில், மாவட்ட தலைவர் இசக்கி முத்து குமார் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>இதில், மாவட்ட பொறுப்பாளர்கள் ராகவேந்திரா, சரவணகுமார், நாராயண ராஜ், பலவேசம், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>