ஜெருசலேத்திற்கு புனித பயணம்; அரசு நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்வு- முதல்வர் பழனிசாமி
நிருபர்
December 21, 2020
ஜெருசலேத்திற்கு புனித பயணம்; அரசு நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்வு- முதல்வர் பழனிசாமி

ஜெருசலேத்திற்கு புனித பயணம் மேற்கொள்வோருக்கு அரசு வழங்கும் நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்வோருக்கு அரசு வழங்கும் நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கிறித்தவர்கள் மேற்கொள்ளும் இந்த புனிதப் பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹெம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா உள்ளிட்ட கிறித்துவ மத தொடர்புடைய பிற புனித தளங்களையும் உள்ளடக்கியது.

ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு 2011ம் ஆண்டில் இருந்து செயல்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.