தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு!
நிருபர்
July 21, 2022
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு!
<p><b>தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.</b></p><p>தூத்துக்குடி பூபாலராயர்புரம் 3-வது தெருவை சேர்ந்தவர் வினோத். இவருடைய மகன் வினிஸ் அஸ்வின் (வயது 18) இவர் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். பகுதி நேரமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளில் ஐஸ் நிரப்பும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். </p><p>இந்த நிலையில் இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்தார். அங்கு இருந்த ஒரு விசைப்படகில் ஐஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கடலில் விழுந்து மூழ்கிவிட்டாராம். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வினிஸ் அஸ்வினை மீட்க முயன்றனர். ஆனால் அவர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். </p><p>இது குறித்து தகவல் அறிந்த தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>