தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாள் மதுபான கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நிருபர்
July 06, 2022
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாள் மதுபான கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு! தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலை முன்னிட்டு நான்கு நாட்கள் குறிப்பிட்ட இடங்களில் மதுபான கடைகள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</b></p><p><b style="color: rgb(255, 0, 255);">இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :</b></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலை முன்னிட்டு 07.07.2022, 08.07.2022, 09.07.2022 மற்றும் 12.07.2022 ஆகிய தினங்களில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135C-இன் படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, குறிப்பிட்ட 27 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் FL2, FL3 உரிம தலங்களில் அமைந்துள்ள பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.</p><p>மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்தார்கள்.</p>