திருச்செந்தூா் கோயிலில் வருஷாபிஷேகம்
நிருபர்
July 02, 2022
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற 8ஆம் தேதி ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற 8ஆம் தேதி ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.</b></p><p><b style="color: rgb(255, 156, 0);">இது குறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : </b></p><p>திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாதம் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகிறது. </p><p>தொடா்ந்து, கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். காலை 8.30 மணிக்கு விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.</p>