தூத்துக்குடியில் மண் சார்ந்த கலைகளோடு அரங்கேறும் நெய்தல் கலைவிழா - கனிமொழி எம்பி அறிவிப்பு!
நிருபர்
June 29, 2022
தூத்துக்குடியில் மண் சார்ந்த கலைகளோடு அரங்கேறும் நெய்தல் கலைவிழா - கனிமொழி எம்பி அறிவிப்பு!
<p><b>தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் அதன் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக தூத்துக்குடியில் 'நெய்தல் விழா - தூத்துக்குடி கலை விழா' ஜூலை 7 முதல் ஜூலை 10, 2022 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாக, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி, வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.</b></p><p><b style="color: rgb(206, 0, 0);">இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :</b></p><p>கலையும் இலக்கியமும் நம்முடைய வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகவே எப்பொழுதும் இருந்திருக்கிறது. நம்முடைய மக்களுடைய வாழ்க்கையை அந்த வாழ்க்கையில் இருக்கக்கூடிய அழகான விஷயங்களை எடுத்துச்சொல்லக் கூடிய மண் சார்ந்த கலைகள், அந்த நிகழ்வுகளின் ஒரு விழாவை வரக்கூடிய ஜூலை 7 முதல் ஜூலை 10ம் தேதி வரை தூத்துக்குடியிலே நெய்தல் திருவிழாவாக - தூத்துக்குடி கலைவிழாவாக நடத்த இருக்கிறோம்.</p><p>கலை விழாவோடு உணவு திருவிழாவும் நடைபெற இருக்கிறது. 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சியிலே உங்கள் வருகை அவர்களை ஊக்கப்படுத்தும், உங்களது கைத்தட்டல் அவர்களை உற்சாகப்படுத்தும், உங்களுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.</p>