<p><b>தூத்துக்குடி&nbsp; மாநகர பகுதியிகளில் இரண்டாம் கட்ட தடுப்பு ஊசி செலுத்தாதவர்களுக்கு 30ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், அதனை பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.</b></p><p>தமிழகம் முழுவதும் கொரோன தொற்றை கட்டுபடுத்துவது&nbsp; தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.&nbsp;</p><p>அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் உள்ள 60 வார்டுகளில் இரண்டாம் கட்டமாக செலுத்த வேண்டிய கொரோனா தடுப்பு ஊசியை சுமார் 60 ஆயிரம் பேர் வரை செலுத்தாத நிலையில் உள்ளனர். எனவே,&nbsp; மாநகர பகுதியில் உள்ளவர்களுக்கு வரும் 30ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமணை உள்ளிட்ட 127 இடங்களில் சிறப்பு தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடைபெறவுள்ளது.</p><p>எனவே, இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளவும், கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கிடம் மாநகர பொதுமக்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரூஸ்ரீ ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>