மின்னணு முறையில் பெருந்தொகைப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான RTGS வசதி  இன்று முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும்-ரிசரவ் வங்கி அறிவிப்பு

வங்கிக் கணக்குகளில் இருந்து மற்றொரு கணக்குக்குப் பெருந்தொகையை மின்னணு முறையில் உடனடியாகப் பரிமாற்றம் செய்வதற்கு RTGS என்னும் வசதி உள்ளது.

இப்போது இந்த வசதி வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

மின்னணுப் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதியை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இன்று முதல் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் RTGS வசதி செயல்படும்.