<p><b>தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூபல்ராயர்புரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக முள் கரண்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>தூத்தக்குடி பூபல்ராயர்புரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டீன் மகன் சுரேஷ் (47) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சைமன் மகன் கிரவுண்ட்சன் (32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.</p><p>இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 04.04.2022 அன்று சுரேஷ் தனது வீட்டில் நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த கிரவுண்டசன் சுரேஷிடம் தகராறு செய்து சாப்பிட பயன்படுத்தும் முள் கரண்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் சிங் வழக்குபதிவு செய்து மேற்படி&nbsp; கிரவுண்ட்சனை கைது செய்தார்.</p>