டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
நிருபர்
December 13, 2020
டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மது கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானங்களின் விவரங்கள் வருமாறு:-

1. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை வழங்க பட வேண்டும்.

3. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.

4. அ.தி.மு.க. அரசு 2016-ம் ஆண்டு தேர்தலில் டாஸ்மாக் மது கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறி இருந்தது. சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண் ஒருவர் குடித்துவிட்டு தகாத வார்த்தைகளை பேசியது சமூக வலைதளத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது. பெண்களும் இன்று குடிக்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

5. பூந்தமல்லியில் இருந்து காஞ்சீபுரம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

6. தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளங்களை தூர்வாரி அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்.

7. தமிழகம் முழுவதும் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை உடனடியாக சரிசெய்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்.

8. இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

9. கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் பணிபுரிந்த டாக்டர்கள், செவிலியர்கள், போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.