நாடு முழுவதும் அனைத்து  வங்கிகளுக்கும் 4 நாட்கள் மூடப்படுவதால் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கைவிடுதல் மற்றும் தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.  அதன்படி மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் வருகிற 28, 29-ந்தேதி ஆகிய இருநாட்கள் நாடு முழுவதும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.  இந்த போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும்  ஆதரவு  தெரிவித்திருக்கிறது.

அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராம மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் என நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில்  பங்கேற்கின்றனர்.  குறிப்பாக தமிழகத்தில் உள்ள 73 ஆயிரம் வங்கி கிளைகள் மற்றும் அதில் பணியாற்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

முன்னதாக வருகிற சனி (26-ந்தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (27-ந்தேதி) இரு நாட்களும் வங்கிகளுக்கு வார விடுமுறையாக உள்ள நிலையில்,. அதற்கு அடுத்து மார்ச் 28, 29 ஆகிய 2 நாட்களுக்கும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் மொத்தமாக 4 நாட்களுக்கு வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வங்கி பணிகளான பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற அனைத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.எம். சேவையும் பாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.