நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடி 48வது வார்டில் போட்டியிட சுயேட்ச்சை வேட்பாளர் வெங்கடேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நிருபர்
February 04, 2022
தூத்துக்குடி 48வது வார்டு கவுன்சிலர்

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான 48வது வார்டில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் வெங்கடேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.

இந்நிலையில், இன்று கால்டுவெல் காலனி சீவந்தாகுளம் வள்ளிநாயகபுரம். சால்ட் காலனி ஆகிய பகுதிகளை கொண்ட 48வது வார்டில் சுயேட்ச்சை வேட்பாளராக சமூக ஆர்வலர் வெங்கடேஷ் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.