முதல் முறையாக தேர்தலில் களம் இறக்கப்பட்டு அரசியல் வாரிசாக அடையாளம் காட்டியிருக்கும் எஸ்பிஎஸ்!
நிருபர்
February 01, 2022
முதல் முறையாக தேர்தலில் களம் இறக்கப்பட்டு அரசியல் வாரிசாக அடையாளம் காட்டியிருக்கும் எஸ்பிஎஸ்!
<p><b>தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</b></p><p>தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது இதில் கூட்டணியின்றி தனித்து போட்டியிடும் அதிமுக, தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது .</p><p>இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்பிஎஸ் ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மகன் ஆவார்.</p><p>இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். மேலும், எஸ்.பி.எஸ் ராஜா வெற்றி பெற்றால் அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>