<p><b>கடந்த 2&nbsp; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 23 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.</b></p><p>தமிழகத்தில்&nbsp; கொரோனா 3வது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு கடந்த 5 ஆம் தேதி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.&nbsp; அதன்படி இரவு நேர ஊரடங்கு,&nbsp; ஞாயிறு முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு&nbsp; வெளியிட்டது.&nbsp; அதன்படி கடந்த (ஜன ) 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல்&nbsp; முதல் முழு ஊரடங்கு கடந்த&nbsp; 8 ஆம் தேதி&nbsp; ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டது.</p><p>இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 16 ஆம் தேதி 2வது&nbsp; ஞாயிறு முழு ஊரடங்கு அமலானது. இந்த 2 முழு ஊரடங்கு நாட்களிலுமே&nbsp; அத்தியாவசிய பணிகளைச் செய்யவும் திருமணத்திற்குச் செல்லவும் மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்தது. பொது போக்குவரத்திற்கு அரசு முற்றிலும் தடை விதித்திருந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், வரும் ஜனவரி 23 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.</p>